திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் மூலமாக காலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க அவருக்கு லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதேபோன்று, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து தனது கணவருடன் வந்து சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அவருக்கும் ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்கள் முழங்க தீர்த்த மட்டும் கலந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருமணம் முடிந்த கையோடு தமது கணவருடன் வந்து சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என பி.வி.சிந்து தெரிவித்தார்.