மக்களவை தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மொத்தம் 64 கோடியே 64 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்ததாகவும், இதில் ஆண்கள் 65.55 சதவீதம் பேரும், பெண்கள் 65.78 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 726 பெண்கள் போட்டியிட்டதாகவும், 2024ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 800ஆக அதிகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் 12 ஆயிரத்து 459 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும், அதில் 86 சதவீதம் பேர், அதாவது 7 ஆயிரத்து 190 பேர் டெபாசிட் இழந்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.