சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் தியாகங்களை போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களை எதிர்த்து கடுமையான போர்களில் ஈடுபட்டவருமான மாவீரர் பொல்லான் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தமிழகத்தின் காவிரிக்கரை, அரச்சலூர் மற்றும் ஓடாநிலை பகுதிகளில் மாவீரர் தீரன் சின்னமலை அவர்கள் தலைமையிலான படை, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர்களில் வெற்றி பெறுவதற்கான முதன்மைக் காரணியாக விளங்கியவர் ‘மாவீரர் பொல்லான்’ அவர்கள்.
மேலும், தங்களது படையினருக்கான போர்முறை வகுப்பதிலும் தனிச்சிறப்புடன் செயல்பட்டார். மாவீரர் பொல்லான் அவர்களின் இன்றைய பிறந்த தினத்தில், இந்திய விடுதலைக்கு அவர் அளித்த தியாகங்களைப் போற்றி வணங்குவோம்” என தெரிவித்துள்ளார்.