மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
Sep 24, 2026, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2024, 10:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களும், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரு.அருண்குமார் IPS அவர்களும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறுவதை பார்க்கும் போது திமுகவை சேர்ந்த பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்ற குற்றவாளிகள் யார் என்பதை மக்களிடம் மறைப்பதற்கான முயற்சி திமுக அரசின் உத்தரவின் பேரில் நடந்து கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

தமிழக முதல்வரின் நேரடி கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் இயங்குகிற தமிழக காவல்துறை பாதிக்கப்பட்ட மாணவி மீதே குற்றம் இருப்பது போன்ற விஷயங்களை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்ததும், மாணவியின் சுய விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ததும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்ததாகக் தெரியவில்லை.

ஏதோ உள்நோக்கத்தோடு திட்டமிட்டே தமிழக அரசும் காவல்துறையும் இவ்வழக்கில் செயல்படுவது போன்ற சந்தேகத்தை அனைவருக்கும் ஏற்படுத்துகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுகவை சேர்ந்தவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதும், தேசிய மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதும் தான் இவ்விஷயத்தில் இதுவரை நடந்துள்ள ஒரே நம்பிக்கையும், ஆறுதலும் ஆகும்.

தமிழக காவல்துறை இவ்வழக்கை விசாரிப்பதை விட சிபிஐ விசாரிப்பதே பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க ஒரே வழி என்பதே நிதர்சனம்” என ஹெச்.ராஜா  தெரிவித்துள்ளார்.

Tags: chennai policeAnna University campusstudent sexual assaultDMKAnna Universitytamilnadu governmenth raja
Share
Tweet
SendShare
Previous Post

சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் தியாகங்களை போற்றி வணங்குவோம் – எல்.முருகன் புகழாரம்!

Next Post

அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதம்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகை; தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள காவல்துறை

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க கிரீடம் மாயம்;தேவசம்போர்டு விசாரணை

சமையல் எண்ணெய் அடிப்படை சுங்க வரி குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு

கிருஷ்ணகிரி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை குண்டும் குழியுமாக பராமரித்த விவகாரம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடை; சிறப்பு செய்தி தொகுப்பு

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies