தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத ஆளுமையாக விஜயகாந்த் விளங்கியதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :
“தமிழ்த் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனர் தலைவருமான ‘பத்மபூஷன்’ விஜயகாந்த் அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழ்த் திரைப்படங்களில் தனது தனித்தன்மை கொண்ட நடிப்புத் திறனாலும், திரைப்படக் கலைஞர்களுக்கான பல்வேறு உதவிகள் செய்ததன் மூலம் ‘புரட்சிக் கலைஞர்’ என்று அழைக்கப்பட்டார்.
மேலும், தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத ஆளுமையாக விளங்கியதுடன், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயல்பட்ட, ‘பத்மபூஷன்’ விஜயகாந்த் அவர்களின் நினைவினை போற்றுவோம்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.