மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
காரைமேடு பகுதியில் ஓளிலாயம் 18 சித்தர்கள் பீடம் அமைந்துள்ளது. இங்கு புத்தாண்டை முன்னிட்டு 60 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டு மனமுருகி வழிபட்டனர்.