அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவையொட்டி, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தொலைநோக்கு சிந்தனை கொண்ட ஜிம்மி கார்டர், சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக அயராது பாடுபட்டதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா இடையிலான நட்பை வலுப்படுத்தியதில் ஜிம்மி கார்டரின் பங்கு மகத்தானது என்று கூறிய பிரதமர் மோடி, அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அமெரிக்க மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.