சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள 11 மாடிகளை கொண்ட நிர்வாகத் துறைக்கான புதிய கட்டடத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்து வைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிர்வாகத்துறைக்கு என 11 அடுக்குகளை கொண்ட புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சந்தரேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதித்துறை விரைந்து நீதி வழங்குவதற்காக நிர்வாகத்துறையின் செயல்பாடுகள் மிக முக்கியமானது என தெரிவித்தார்.
மேலும், தற்போது திறக்கப்பட்டுள்ள 11 அடுக்குகளைக் கொண்ட புதிய கட்டடம் வருங்கால நீதிக்கான கட்டடம் எனவும் தெரிவித்தார்.