பறவையா? தடுப்புச்சுவரா? : தென் கொரியா விமான விபத்திற்கு காரணம் என்ன?
Oct 2, 2025, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பறவையா? தடுப்புச்சுவரா? : தென் கொரியா விமான விபத்திற்கு காரணம் என்ன?

Web Desk by Web Desk
Dec 31, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்கொரியாவில் 179 பேரை பலி வாங்கிய விமான விபத்துக்கு ஓடுபாதையின் எல்லையில் இருந்த கான்கிரீட் தடுப்புச் சுவர் தான் காரணமா? என விமானத் துறை வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தென் கொரியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ‘ஜேஜூ ஏர்’ 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அண்மையில் விபத்துக்குள்ளான 7C2216 என்ற விமானம், இந்நிறுவனத்தின் 15 ஆண்டுகள் பழமையான போயிங் 737-800 ரக விமானமாகும்.

தென் கொரியாவின் சியோலுக்கு தெற்கே 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை வந்தடைந்தது.

‘பறவைகள் விமானத்தில் மோதுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, விமானம் தரையிறங்கும் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நேரத்தில் விமானத்தின் மீது பறவை மோதியதால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் லேண்டிங் கியர் செயல்படாமல் போனது. இதனால் வழக்கமான தரை இறக்கம் செய்யமுடியாமல் போனது.

அவசரகால பேரழிவு சமிக்ஞையான Mayday என விமானி அறிவித்ததை அடுத்து, விமானத்தை எதிர் திசையில் இருந்து தரையிறக்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்தது.

லேண்டிங் கியர் செயல்படாத போது விமானத்தின் சக்கரங்கள் வெளியில் வராது. ஆகவே பெல்லி லேண்டிங் முறையில் விமானத்தைத் தரையிறக்க விமானி முடிவு செய்தார்.

பெல்லி லேண்டிங் என்பது, விமான சக்கரங்கள் வெளியே வராத சமயத்தில், விமானத்தின் முன்பகுதியை தரையில் உரசி விமானத்தை நிறுத்துவதாகும்.

மாற்று ஓடுபாதையில் விமானம் தரையிறங்கியதுமே கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கிய படியே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதி வெடித்துச் சிதறி தீப்பிடித்தது.

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில்,விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவதும் பின்னர் விமானம் தீப்பிடிப்பதும் தெரிகிறது. மேலும் இன்னொரு வீடியோவில், சக்கரங்கள் ஏதும் வெளிவராத சூழலில் தரையிறங்கும் விமானம் சறுக்கிக் கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

பொதுவாக, நிலையான ஓடுபாதையின் பாதுகாப்பு பகுதிகள் ஓடுபாதையின் எல்லையைத் தாண்டி 1,000 அடி நீளமாகவும், பக்கவாட்டில் 500 அடி நீளமும் இருக்க வேண்டும் என்றும், இந்த ஓடு பாதை பகுதிகளுக்குள் இருக்கும் எந்தவொரு கட்டமைப்பும் எளிதில் நொறுக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு கூறுகிறது.

முவான் விமான நிலையத்தில், ஓடுபாதையின் முடிவில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் மண் மேடு சூழ்ந்த கான்கிரீட் தடுப்புச் சுவர் இருந்ததே விபத்துக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டப் படுகிறது.

இந்தச் சூழலில்,தென் கொரிய அரசு விதிமுறைகளின் படியே, ஆண்டெனா நிறுவப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவர் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விமானப் பாதுகாப்புக்கான கொரியா சங்கத்தின் தலைவரான ஹ்வாங் ஹோ-வான், ஆண்டெனாவை கான்கிரீட் சுவரில் வைத்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

விமான நிலையத்தின் வடிவமைப்பு காப்பு மற்றும் விபத்துக்குக் கான்கிரீட் சுவர் காரணமா ? என்பது பற்றிய விவாதம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக், நாட்டின் ஒட்டுமொத்த விமான உள்கட்டமைப்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags: Is it a bird? A barrier? : South Korea as the cause of the plane crash?South Korea plane crash:
ShareTweetSendShare
Previous Post

உலகிலேயே அதிக தங்கம் வாங்கி குவிக்கும் இந்தியப் பெண்கள்!

Next Post

மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து ஏன் கோலம் போட வேண்டும்?

Related News

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா – நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் – எல்.முருகன் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies