அண்ணா பல்கலை. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
தமிழக உள்துறை, டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில் ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், ஞானசேகரன் மீதான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் தெரிவித்துள்ளார். (OUT)