சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் மவுனம் சாதிப்பது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பெரியமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நியாயம், ஆளுங்கட்சியாக ஆன பிறகு ஒரு நியாயமா? என்றும், “பெண்கள் படிக்கும் இடத்தில் வெளிநபர் அத்துமீறி நுழைந்தது எப்படி? என வினவியுள்ளார்.
“சிசிடிவி இல்லாத காலத்தில் கூட தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டதாகவும், “எதிர்த்து கேள்வி கேட்டால் அடக்குமுறையை கையாள்வதா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.