அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தென்காசி நகர்மன்ற கூட்டத்திலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தென்காசி நகர்மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பாஜக பெண் உறுப்பினர் சுனிதா தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.