நாட்டின் தொழில்துறையை மீட்டெடுப்பதில் இன்றைய மாணவர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமிர்தபுரியில் உள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் இன்று இருக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைத்தது, பல நூற்றாண்டுகளுக்கு முன் உலகப் பொருளாதாரத்தின் ஆணிவேராக இருந்த பாரதம், காலனித்துவத்தின் போது சந்தித்த கசப்பான விளைவுகள் மற்றும் எழுச்சி ஆகியவற்றைப் பற்றி அந்த நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது.
கடந்த தசாப்தத்தில் நமது நாட்டை முன்னேற்றம் மற்றும் செழிப்புப் பாதையில் செல்கிறது.
தொழில்துறை 6.0 இல் இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்துவதிலும் அதன் புகழ்பெற்ற கடந்த காலத்தை மீட்டெடுப்பதிலும் இன்றைய மாணவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.