புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு திண்டுக்கல், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பனிப்பொழிவு அதிகரிப்பால் பூக்களின் உற்பத்தி குறைந்ததால், வரத்தும் குறைந்துபோய் உள்ளது. இதனால், ஒரு கிலோ மல்லி 2 ஆயிரத்து 600 ரூபாயில் இருந்து , மூன்று ஆயிரம் ரூபாயிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல், முல்லை, அரளி, சாமந்தி, சம்பங்கி, பன்னீர் ரோஸ் உள்ளிட்ட பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.