சென்னையில் மறைந்த ரவுடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ரவுடி அலெக்ஸ். இவரை கடந்த 2021-ல் கொலை செய்ததாக நவீன் உட்பட 6 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் நோக்கி சென்ற நவீனை அடையாளம் தெரியாத மர்மகும்பல் வெட்டிப் கொலை செய்தது.
அலெக்ஸின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் நவீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வில்லிவாக்கம் பாரதி நகருக்குள் புகுந்த மர்ம நபர்கள், ரவுடி அலெக்ஸ் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடினர்.
கதவு தீப்பிடித்து எரிந்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயை அணைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் சூழலில், வில்லிவாக்கம் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.