அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருவதாக நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பான போராட்டத்திற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் பாமக வழக்கறிஞர் பாலு அவசர முறையீடு செய்தார்.
இந்த விவகாரத்தை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி, பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியல் ஆக்குவது ஏன் என வினவினார்.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்திற்கு ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும் எனக்கூறிய நீதிபதி, மாணவி விவகாரம் தொடர்பான போராட்டத்திற்கு அனுமதி கோரிய பாமகவின் முறையீட்டை விசாரிக்க முடியாது என நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.