பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவையும், கர்நாடகா தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானையும் நியமித்து பாஜக அறிவித்துள்ளது.
அதேபோல உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பீகாருக்கு மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில், மத்தியப் பிரதேசத்துக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை தேர்தல் பொறுப்பாளராக நியமத்து பாஜக தலைமையிடம் அறிவித்துள்ளது.