ஜல்லிக்கட்டு போட்டி : களத்தில் இறங்கிய விஜயபாஸ்கர் - சிறப்பு தொகுப்பு!
Nov 15, 2025, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி : களத்தில் இறங்கிய விஜயபாஸ்கர் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 3, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. இந்த செய்தி தொகுப்பில்..

தைப் பொங்கல் திருநாள் என்றதும் பொங்கலும், கரும்பும் ஞாபகம் வருகிறதோ இல்லையோ ஜல்லிக்கட்டுதான் அனைவரது கண் முன்பும் வந்து நிற்கும். வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளைகளும், அதன் திமில் மீது ஏறி அடக்கும் வீரர்களின் தீரத்தையும் பார்ப்பதே ஒரு கொண்டாட்டம் தான்.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ் பெற்றது எனலாம். இந்தாண்டு பொங்கல் திருநாள் வரும் 14-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அடுத்தநாள் மாட்டுப்பொங்கல். இதனை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்துவதில் உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது காளைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக தற்போது களத்தில் இறங்கியுள்ளார்.

காளை வளர்ப்பதில் ஆர்வமுள்ள விஜயபாஸ்கர் தனது தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறார். பிடிபடாத காளை என்று பெயரெடுத்த கறுப்புக் கொம்பன் காளைக்குச் சொந்தக்காரரும் இவர்தான்.

அதேபோல் வெள்ளைக் கொம்பன் காளையும் அவருக்குப் புகழைத் தேடித் தந்தது. தற்போது அவை இரண்டும் உயிரிழந்துவிட்ட  நிலையில், தற்போது சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கொம்பன் 2, கண்ணாவரம் உள்ளிட்ட காளைகளை ஜல்லிக்கட்டில் களமிறக்க உள்ளார் விஜயபாஸ்கர். இதற்காக அவர் தனது தோட்டத்தில் காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார்.

தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிக வாடிவாசல்கள் உள்ளன. இங்கு ஜனவரி முதல் மே மாதம் வரை 120-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு, 30க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு, 50க்கும் மேற்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக தயாராகி வருவது காளைகளும், மாடுபிடி வீரர்களும் மட்டுமல்ல, இந்த வீர விளையாட்டைப் காண தமிழக மக்களும் தான் என்று கூறினால் அது மிகையாகாது.

Tags: PalameduFormer Minister VijayabaskarAlanganallurbullfightersvijaybaskar train bullsjallikattuPongal festivalAvaniyapuram
ShareTweetSendShare
Previous Post

கோபுர கலசத்தில் இரிடியம் : END CARD இல்லாமல் தொடரும் மோசடி – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஆருத்ரா தரிசன விழா – ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

Related News

இன்றைய தங்கம் விலை!

மதுரை சென்ற இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை – உற்சாக வரவேற்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies