சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு துவங்குவதற்கு முன்னர் பெற்றோரின் ஒப்புதல் தேவை என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு துவங்குவதற்கு முன்னர் பெற்றோரின் ஒப்புதல் தேவை என்றும், இதனை சம்பந்தப்பட்ட வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 18-ம் தேதிக்கு பிறகு வரைவு விதிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.