நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே சிறுத்தை தாக்கி உயிரிழந்த இளைஞரின் உடலை எடுத்து செல்லவிடாமல் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் எடக்காடு அருகேயுள்ள அறையட்டி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், அறையட்டி கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு சென்ற போது சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இளைஞரின் உடலை எடுத்து செல்ல விடாமல், வனத்துறை மற்றும் காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.