சென்னை பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் 4-ஆவது நாளாக மாவட்ட செயலாளர்களுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதால் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை அடுத்த பனையூரில் பாமகவின் புதிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு, மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டத்தில் சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி மற்றும் ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. வரும் 2026 -ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.