வீர சாவர்க்கரின் சீர்திருத்தம், தவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தக் கூடிய வகையில் “வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை எனும் புத்தகம் அமைந்துள்ளதாக பாஜக மாநில செயலாளரும், நூலை எழுதியவருமான எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் நூல் வெளியிட்டுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் சாவர்க்கரை பற்றி பொய் பிரச்சாரங்களும் அவதூறுகளும் வெளிவந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டினார். வீர சாவர்க்கரின் சீர்திருத்தம், தவம் வெளிப்படுத்தும் வகையில் புத்தகம் என்றும், “சாவர்க்கரின் உண்மை வரலாற்றை கூறும் வகையில் புத்தகம் அமைந்திருக்கும் எனறும் எஸ்.ஜி.சூர்யா கூறினார்.