தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 14,15,16 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 18 மற்றும் 19 ஆகியவை சனி, ஞாயிற்று கிழமைகள் அரசு விடுமுறை என்பதால் இடைப்பட்ட 17 ஆம் தேதியும் விடுமுறை அளிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனவரி 17 ஆம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. 17ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25ஆம் தேதி அன்று பணி நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.