டெல்லியில் நமோ பாரத் ரயிலின் புதிய வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மத்திய அரசு சார்பில் டெல்லியில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லி சாஹிபாபாத் பகுதியில் இருந்து அசோக் நகர் வரை நமோ பாரத் ரயில் வழித்தடம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த ரயில் பாதை அமைக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி இதனை திறந்து வைத்தார்.
இந்த புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நமோ பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மாணவர்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.