முதல்வர் விழாவில் பங்கேற்ற மாணிவகளின் கருப்பு துப்பட்டா அகற்றி விட்டு வருமாறு கட்டாயப்பபடுத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வீடியோவுடன் எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அணிந்த மாணவிகள் மண்டபத்தில் நுழையும் முன் அவற்றை அகற்றிவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு அச்சம் சூழ்ந்து விட்டது. என்ன செய்வது என தெரியாமல் குழம்பி நம்பிக்கை இழந்துள்ளனர். இது என்ன விதமான எதேச்சதிகாரம்? என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.