அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இருந்தது மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டமன்றத்தில் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று கூடியது. இதில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கமளித்த அவை முன்னவர் துரைமுருகன், ஆளுநருக்கு தமிழக அரசு சார்பில் உரிய மரியாதை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்றது மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் வகையில் துரைமுருகன் தீர்மானம் கொண்டுவந்த நிலையில், அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.