சொல்லி அடிக்கும் இஸ்ரோ! : விண்ணில் செயற்கைக்கோள்கள் இணைப்பு எப்படி நடக்கும்?
Sep 28, 2026, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சொல்லி அடிக்கும் இஸ்ரோ! : விண்ணில் செயற்கைக்கோள்கள் இணைப்பு எப்படி நடக்கும்?

Murugesan M by Murugesan M
Jan 6, 2025, 09:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை அடுத்து விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.
SpaDeX என்ற Space Docking Experiment எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு பளு தூக்கும் குதிரை என்று அழைக்கப்படும் PSLV C60 ராக்கெட்டில் இரண்டு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்கள், 15வது வினாடியில் SDX02 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி, 476.84 கிலோமீட்டர் உயரத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, 476.87 கிலோமீட்டர் உயரத்தில் SDX01 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தான், வரும் 7ம் தேதி, விண்வெளியில் செயற்கைகோள் இணைப்பு சோதனை தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

SpaDeX செலுத்திய பிறகு, 24 உப செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த உப செயற்கை கோள்கள் பூமியிலிருந்து 355 கிலோமீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டன.

குறிப்பாக, இந்தியாவின் முதல் ரோபோட்டிக் விண்வெளி திட்டமாக RRM-TD எனப்படும் ரோபோ கைகளும் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், ரோபோ கைகள் விண்ணில் செயல்படும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

வருங்காலங்களில், ரோபோ கைகள், விண்வெளியில் உள்ள செயற்கைகோள்களை எளிதில் பழுதுபார்க்கும் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் Make in India திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில், ஒரு செயற்கைக்கோளின் உள் உந்துவிசை அமைப்புகளைப் பயன்படுத்தி அதன் சறுக்கலைப் பிடிக்கவும், இரண்டு செயற்கைக்கோள்களின் சுழல் நிலைகளைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்கிடையேயான 20-கிமீ தூரத்தை பராமரிப்பதையும் இஸ்ரோ உறுதி செய்யும்.

இரண்டு செயற்கை கோள்களும் ஒரே சுற்றுப்பாதையில் தங்கி, இரட்டைக் குழந்தைகளைப் போல ஒரே வேகத்தில் பயணிக்கும்.

உகந்த சூரிய திசையை அடைந்ததைத் தொடர்ந்து, செயற்கைக்கோள்களுக்கிடையேயான தூரம் படிப்படியாகக் குறைக்கப் படும்.

அதாவது, 20 கிலோமீட்டர் இடைவெளியை 5 கிலோமீட்டர் ஆகவும், பின்னர் 1.5 கிலோமீட்டர் ஆகவும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள்கள் ஒன்றுக்கொன்று 5 கிலோமீட்டருக்குள் இருந்தால், இரண்டுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தை அனுமதிக்கும் வகையில் செயற்கைக்கோள்களுக்கு இடையேயான ரேடியோ அலைவரிசை (RF) இணைப்புகள் செயல்படுத்தப்படும்.

இதற்காக, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் ஆய்வகத்தில் பல புதிய சென்சார்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இவை, இணைப்பை வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

செயற்கைக்கோள்கள் இரண்டும்,1.5 கிலோமீட்டருக்குள் வந்தவுடன் இணைப்பு பணி தொடங்கும்.

CHASER செயற்கைக்கோளில் நீட்டிக்கப்பட்ட வளையம் பின்வாங்கி, TARGET செயற்கைக்கோளை நோக்கி இழுத்து, இரண்டும் ஒரு யூனிட்டாக இணைக்கப்படும்.

இணைக்கப்பட்டவுடன், ஒரு செயற்கைக்கோளிலிருந்து மற்றொன்றுக்கு ஆற்றல் பரிமாற்றம் நடக்கும். முதலில் ஒரு ஹீட்டரை இயக்கி வெற்றிகரமான இணைப்பை இஸ்ரோ உறுதிப்படுத்தும். இந்த முழு பணியும் 15 நிமிடங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SpaDeX வெற்றி, இந்தியாவின் விண்வெளித்துறை வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

சந்திரயான்-4 மற்றும் பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் போன்ற எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான முதல் வெற்றி படியாக இந்த படியாக SpaDeX அமைத்திருக்கிறது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை அடுத்து விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

Tags: ISROIsro who says and hits! : How satellites connect in space?
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.400 கோடி வர்த்தகம் உச்சம் தொட்ட காலண்டர் உற்பத்தி!

Next Post

குழந்தை வேலப்பர் திருக்கோயில்! : முருகனே நினைத்தால்தான் தரிசனம் கிடைக்கும்!

Related News

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை கைது செய்த காவலருக்கு சல்யூட் – நயினார் பாராட்டு!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக தோற்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய தயாரா?  – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அபார வெற்றி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக நடந்த அறங்காவலர் குழு தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் – பாஜக எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies