நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் லெபுசே பகுதியில் காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாள-திபெத் எல்லைக்கு லெபுசே நகரின் வடகிழக்கே 93 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், பீகாரின் முசாபர்பூர், மோதிஹாரி, பெட்டியா மாவட்டங்களிலும் மற்றும் டெல்லி என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின்போது வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்ததாகவும், நிலநடுக்கம் காரணமாக இதுவரை 50 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.