அரசியல் தொடர்பான கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினி காந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூலி திரைப்படத்தின் 70 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார். 13 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்க வேண்டாம் என பலமுறை தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து கூலி படப்பிடிப்புக்காக தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.