திமுக தொடங்கப்பட்ட ஆண்டு தெரியுமா? : இளைஞர் அணி கொடுத்த 'ஷாக்' டிரீட்மெண்ட் - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக தொடங்கப்பட்ட ஆண்டு தெரியுமா? : இளைஞர் அணி கொடுத்த ‘ஷாக்’ டிரீட்மெண்ட் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 8, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கலில் நடந்த திமுக சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டத்தில், திமுக துவங்கப்பட்ட ஆண்டு கூட தெரியாமல் இளைஞர் அணியினர் திருதிருவென விழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், அந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணியினருக்கு சமூக வலைதள பயிற்சி பாசறை நடத்தப்பட்டது. குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மற்றும் ஈரோடு திமுக எம்.பி பிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சமூக வலைதளங்களில் திமுக-வினர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து தமிழன் பிரசன்னா எடுத்துரைத்தார். அப்போது அவரை கவனித்துக்கொண்டிருந்த இளைஞர் அணியினரிடம், திமுக எப்போது தொடங்கப்பட்டது என்று கூற முடியுமா? என தமிழன் பிரசன்னா கேள்வி எழுப்பினார். இதை சற்றும் எதிர்பார்க்காத தொழில்நுட்ப பிரிவு இளைஞர் அணியினர், கேள்விக்கு பதில் தெரியாததால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு திருதிருவென விழித்தனர்.

ஒருவேளை கேள்வி புரியவில்லையோ என எண்ணிய தமிழன் பிரசன்னா, திமுக தொடங்கப்பட்ட ஆண்டு எதுப்பா சொல்லுங்க எனக்கூறி அதே கேள்வியை மீண்டும் கேட்டார். அப்போது கூட்டத்தில் ஒருவர் திமுக தொடங்கப்பட்ட ஆண்டு 1947 எனவும், மற்றொருவர் 1949 எனவும் பதிலளித்து தலைமை தாங்கிய திமுக மூத்த நிர்வாகிகளுக்கு ஷாக் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த தமிழன் பிரசன்னா, 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி திமுக தொடங்கப்பட்டதாக கூறி அங்கு ஏற்பட்ட சலசலப்புக்கு முடிவுகட்டினார். நிலைமை மோசமானதை உணர்ந்த திமுக மூத்த நிர்வாகிகள், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்களை நைசாக பேசி வெளியே அனுப்பினர்.

நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஒரு நிகழ்வில் திமுக-வினர் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு தெரியாமல் விழித்த சம்பவம் மூத்த நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: namakkalKumarapalayamDMK social media training campThamizhan Prasanna
ShareTweetSendShare
Previous Post

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் வைக்க வேண்டும் – மதுரை ஆட்சியரிடம் பாஜக நிர்வாகி மனு!

Next Post

5 பைசா நாணயம் கொண்டு வந்தால் பிரியாணி இலவசம் – புதிய கடையில் அலைமோதிய கூட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies