தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ வைக்கக்கோரி ஆட்சியரிடம் பாஜக நிர்வாகி மனு அளித்தார்.
மதுரை மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் புதூர் சரவணன் என்பவர், மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் இது தொடர்பாக மனு ஒன்றை அளித்தாா்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிலையம், ரேசன் கடை, அரசு மருந்தகங்களில் முதல்வர் படம் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு நடத்து மது பானக் கடைகளிலும் முதல்வர் ஸ்டாலின் படம் இடம் பெற வேண்டும்.
ஏன் மதுபானக் கடைகளில் முதல்வர் படம் இடம்பெறுவதில்லை என மதுப் பிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினர் அவரது எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக மனுவை அளிப்பதாக தெரிவித்தார்.