தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தொகை வழங்குவது குறித்து யோசிக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தராஜ் பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் பொங்கலின்போது 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டதை குறிப்பிட்ட அவர், தற்போது ஆயிரம் ரூபாய் கூட வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், தற்போது தேர்தல் வரவில்லை என்றும், தேர்தல் வந்தால் பணம் கொடுப்பது பற்றி யோசிக்கலாம் எனவும் தெரிவித்தார். அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.