சேலம் மத்திய சிறையில் கைதிகளால் பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்ட 10 ஆயிரம் கரும்புகள் சிறை கைதிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
சேலம் மத்திய சிறைச்சாலையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறை கைதிகள் மூலம் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, சிறை அங்காடி மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி திறந்த வெளி சிறை தோட்டத்தில், கைதிகளால் பயிரிடப்பட்ட 10 ஆயிரம் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. பொங்கலன்று இந்த கரும்புகள் கைதிகளுக்கு வழங்கப்படும் எனவும், மீதமுள்ள கரும்புகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் சிறை கண்காணிப்பாளர் வினோத் தெரிவித்தார்.