சிவகாசியில் தங்கையை காதலித்த கல்லூரி மாணவரை கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் வீர மாணிக்கம். இவர் தனது நண்பரான 17 வயது சிறுவனின் தங்கையை காதலித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரமடைந்த சிறுவன், வீர மாணிக்கத்தை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சிறுவனை போலீசார் கைது செய்தனர்.