தேனி ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து
மாட்டுப்பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் பொதுமக்கள் அதிகளவில் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டுவது வழக்கம். இதனை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.
6 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. மொத்தமாக ஒரேநாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.