அனைவருக்கும் அனைத்து வளங்களும், நலன்களும் கிடைக்கட்டும். இருண்ட காலம் நீங்கி, ஒளி பிறக்கட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்
தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக, இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உழவுத் தொழிலின் ஆதாரமாக விளங்கும் சூரிய பகவானுக்கும், இயற்கை அன்னைக்கும் நன்றி தெரிவிக்கும் இந்திர விழாவான இன்று, அனைவரும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் அனைத்து வளங்களும், நலன்களும் கிடைக்கட்டும். இருண்ட காலம் நீங்கி, ஒளி பிறக்கட்டும். அனைவரின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும். பொங்கலோ பொங்கல்! என்று தெரிவித்துள்ளார்.