வானிலை சூழலுக்கு தயாராகும் வகையில் மிஷன் மௌசம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அதே நிகழ்வில் வானிலை மாற்றங்களுக்கு எதிரான தாங்குதிறன் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்தல் குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தொலைநோக்கு 2047 ஆவணத்தையும் வெளியிட்டார்.
இதனைதொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வானிலை முன்னறிவிப்புகள் அனைத்து தரப்பு மக்களையும் எளிதாக சென்றடைவதாகவும், குறிப்பாக மீனவர்களுக்கும் துல்லிய தகவல்கள் கிடைப்பதால் அவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
வானிலை முன்னேற்றத்தால் நமது பேரிடர் மேலாண்மை திறன் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் உலகமே பயனடைவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நமது இந்திய வானிலை ஆய்வு மையம், அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் மற்றும் இலங்கைக்கும் துல்லியமான தகவல்களை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.