நடிகை கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் அவரது நீண்ட நாள் காதலனுடன் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து அவரது தல பொங்கல் கொண்டாட்டம் சென்னை நீலாங்கரையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், நடிகர் கல்யாணி பிரியதர்ஷன், மமிதா பைஜூ, சஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குறிப்பாக நடிகரும், தவெக தலைவருமான விஜய் கலந்துகொண்டு கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இதையடுத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.