பிரதமர் மோடிக்கு எதிராக கட்டுக்கதைகளை பரப்பியவர்களுக்கு வளர்ச்சியின் மூலம் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
துக்ளக் வார இதழின் 55வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாட்டில் தீவிரவாதத்தை அழிக்க பல்வேறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை பிரதமர் மோடி மேற்கொண்டதாக கூறினார்.
மதசார்பற்ற உன்னத தலைவரான பிரதமர் மோடி, ஒருசாராரை திருப்திப்படுத்தும் அரசியலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என பியூஷ் கோயல் புகழாரம் சூட்டினார்.