திருப்பூர் தனியார் மதுபானக் கூடத்தில் கூடுதல் தொகைக்கு பில் வழங்கப்பட்டது குறித்து கேட்டதால் ஏற்பட்ட தகராறில், மதுப்பிரியர்களை பார் ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர்.
திருப்பூர் வேலம்பாளையம் காவல் சரகத்துக்கு உட்பட்ட தனியார் மதுபானக் கூடத்தில் மது அருந்திய சிலருக்கு கூடுதலான தொகைக்கான பில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மதுப் பிரியர்கள் கேட்டபோது பார் ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பார் ஊழியர்கள் இணைந்து மதுப்பிரியர்களை சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.