பொள்ளாச்சியில் பல் மருத்துவர் வீட்டில் 136 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த பல் மருத்துவர் கார்த்திக் என்பவர், பொங்கல் விடுமுறையை ஒட்டி, தனது குடும்பத்தினருடன், கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, 136 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில், கைரேகை நிபுணர்கள் மற்றும் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.