வலுவடையும் கடற்படை : சீனாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த மோடி!
Oct 6, 2025, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வலுவடையும் கடற்படை : சீனாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த மோடி!

Web Desk by Web Desk
Jan 15, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கடற்படைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மூன்று போர்க்கப்பல்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை சீனாவுக்கு விடுத்திருக்கும் மறைமுக எச்சரிக்கை என்கிறார்கள் புவிசார் அரசியல் வல்லுநர்கள்.

1949-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியாக ஜெனரல் கே.எம். கரியப்பா பொறுப்பேற்றார். அதை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 15-ஆம் இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து வீரமரணம் அடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்படும். மேலும் இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடைபெறும். அதன்படி 77-ஆவது ராணுவ தினம் மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில் நடைபெற்றது. முன்பு தலைநகர் டெல்லியில் மட்டுமே நடைபெற்று வந்த ராணுவ தின கொண்டாட்டங்கள் அண்மைக்காலமாக நாட்டின் பிற இடங்களிலும் நடத்தப்படுகின்றன. மக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே புரிதலையும் நல்லுறவையும் ஏற்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்முறை புனேவில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது.

ராணுவ தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வீரர்களின் உயிர்தியாகத்தை நாடு நன்றியுடன் நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளார். மேலும் ராணுவத்தினரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு உத்வேகமாக இருக்கட்டும் என்றும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

இதே போல் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கோடிக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனைப் பேணுவதில் அரசு உறுதியோடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராணுவ தினத்தை முன்னிட்டு INS SURAT, INS NILGIRI, INS VAGHSHEER ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்று கப்பல்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல்கள் மூலம் கடற்படை வலுவடையும்.

INS சூரத் போர்க்கப்பல் P15B எனப்படும் GUIDED MISSILE DESTROYER திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதி கொண்ட INS சூரத் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் மற்றும் BARAK-8 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை செலுத்த முடியும்.

INS நீல்கிரி போர்க்கப்பல் கடலில் எத்தகைய சூழல் இருந்தாலும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும். குறிப்பாக எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிரிகளின் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கண்டுபிடித்துவிடும். மேலும் அவற்றை தாக்கி அழிப்பதற்கான ஆயுதங்களும் இதில் உள்ளன.

P75 SCORPENE திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் INS VAGHSHEER. இதன்மூலம் கடலுக்கு அடியில் இருந்து தாக்குதல் நடத்த முடியும்.

3 போர்க்கப்பல்களையும் நாட்டுக்கு அர்பணித்த பிறகு பேசிய பிரதமர் மோடி, உலகின் முக்கிய கடல்சார் வல்லரசாக இந்தியா வளர்ந்து வருகிறது என்றார். நம் நாட்டின் செயல்பாடுகள் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதே தவிர, விரிவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என மோடி தெரிவித்தார். இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் பிரதமர் கூறினார். இதன்மூலம் கடல் மற்றும் நிலப்பரப்பில் அவ்வப்போது எல்லை மீறலில் ஈடுபடும் சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக புவிசார் வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் QUAD கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளது. இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க QUAD கூட்டமைப்பு விரும்பும் நிலையில் பிரதமர் மோடியின் பேச்சு புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags: indian navyPM Modi warning to China!Strengthening Navychina
ShareTweetSendShare
Previous Post

“இந்தியாவுக்கு எதிராக போராட்டம்” : ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை!

Next Post

மூன்றாவது காசி தமிழ் சங்கமம் – பதிவு செய்வது எப்படி?

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

உலகின் மிக உயரமான பகுதியில் சாலை – எல்லை சாலைகள் அமைப்பு சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies