நிலவில் ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களின், லேண்டர் சாதனங்களுடன், ஸ்பேஸ் எக்ஸின் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்பேஸ்எக்ஸின் உதவியுடன் புறப்பட்டுள்ள அமெரிக்க நிறுவனத்தின் லேண்டர் மே மாத துவக்கத்திலும், ஜப்பான் நிறுவனத்தின் லேண்டர் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.