நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் புதுமனை யானைகள் வளர்ப்பு முகாமில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைக் கட்டியது.
அப்போது பொங்கல் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் யானைகளுக்கு வழங்கப்பட்டன. குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற எலிபாண்ட் விஸ்பரரஸ் குறும்படத்தில் இடம்பெற்ற ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகளும் பங்கேற்றன.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து யானைகளை கண்டு ரசித்தும், புகைப்படங்களை எடுத்தும் மகிழ்ந்தனர்.