தமிழகத்தில் பெண்களுக்கு எந்த அளவு பாதுகாப்பு உள்ளது என்பது குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு சார்பில் 50% நிதி கொடுக்க வேண்டும் என்றும், ஆனால் நிதியை வாங்க மறுத்து மத்திய அரசை திமுக குறை கூறுவதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் பாவத்துக்குறியவர்களாக உள்ளனர் என்றும், ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கூட நடத்த தெரியாத அரசாக திமுக அரசு உள்ளதாகவும் சசிகலா சாடினார்.