சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் போட்டிகளில் மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி செந்தாரப்பட்டி அருகே எருதாட்டம் நடைபெற்றது. இதில், மணிவேல் என்பவர் கலந்து கொண்டு காளையை அடக்க முயன்றுள்ளார். அப்போது, மாடு முட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோல, கருப்பூர் அருகே செங்கரடு செம்பு மாரியப்பன் கோயிலில் நடைபெற்ற எருதாட்டத்தில் மாடு முட்டியதில் வேடியப்பன் என்பவர் உயிரிழந்தார். கோயிலின் பின்பகுதியில் கட்டப்பட்டிருந்த காளையின் கொம்பை தடவி பார்த்தபோது அவரை மாடு முட்டியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.