கேரளா சென்றுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்16ஆம் தேதி கேரள சென்றார். இந்நிலையில் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலுக்கு சென்ற அவரை மாலை அணிவித்து வரவேற்ற நிர்வாகிகள், வெள்ளியால் ஆன ‘சப்த மாத்ரு நாக’ சிற்பத்தை வழங்கினர்.
பின்னர், மோகன் பகவத் ‘புல்லுவன்’ பாடலைக் கேட்டு, கோயிலில் உள்ள ‘நாக’ கடவுள்களுக்கு பிரார்த்தனை செய்தார். அவர் கோயிலில் உள்ள சப்த மாத்ருக்களான பிராமணி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகிய ஏழு தெய்வங்களையும் வழிபட்டார்.