நெல்லையில் நடைபெற்ற இளையராஜாவின் கச்சேரியில் மக்கள் அதிகளவில் கூடியதால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
திருநெல்வேலி மாவட்டம் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை முத்தூர் அருகே இருக்கக்கூடிய தனியாருக்கு சொந்தமான இடத்தில் இளையராஜாவின் கச்சேரி நடைபெற்றது.
சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இசை கச்சேரியை பார்க்க கூடினர் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஒன்றன்பின் ஒன்றாக கார்கள் அணிவகுத்து நின்றதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திருநெல்வேலி – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இருக்கைகள் முறையாக ஒதுக்கப்படவில்லை என்றும் சலசலப்பு ஏற்பட்டது. குறைந்தளவிலான போலீசாரை மட்டுமே பணியில் ஈடுபட வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள்.