சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோயில் திருவிழாவில், பக்தர் ஒருவர் கொதிக்கின்ற எண்ணெயில் கையை விட்டு வடை எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.
போடிநாயக்கன்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் கோயிலில், கடந்த வாரம் பூச்சாற்றுகளுடன் தை மாத திருவிழா தொடங்கியது.
இந்நிலையில், காலையில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் தீ மிதித்து காளியம்மாளுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். இதேபோல் பக்தர்கள் சிலர் தமது உடலில் பல்வேறு விதமான அலகுகள் குத்தி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.
மேலும் பக்தர் ஒருவர், கொதிக்கின்ற எண்ணெயில் வடையை கையில் எடுத்து அம்மனை தரிசனம் செய்தார்.