யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளதை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார மையத்திற்கு ‘திருவள்ளுவர் கலாச்சார மையம்’ என்று பெயரிடப்பட்டதை வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, மொழியியல், வரலாற்று மற்றும் நாகரிக பிணைப்புகளுக்கும் ஒரு சான்று என்றும் மோடி கூறியுள்ளார்.